Wednesday, 16 May 2018

பேராவூரணி அரசுக் கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்

பேராவூரணி: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி (இருப்பு- முடச்சிக்காடு) மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல்வழங்கப்படுகின்றன.இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறு ப்பு) இராணி கூறுகையில், இக்கல்லூரியில் இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், இளநிலை வணிகவியல், இளமறிவியல் கணி தம் , இளமறிவியல் கணினி அறிவியல், இள நிலை வணிக நிர்வாகம் உள்ளிட்ட 6 பாடப்பிரிவுகளுக்கு இருபால் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மே 15 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.  விண்ண ப்பங்களை அனுப்ப கடைசி தேதி மே 30 ஆகும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 4 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மாணவர்சேர்க்கை கலந்தாய்வு அரசு விதிமுறைகளின் படி நடைபெறும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக் கட்ட ணம் ரூ. 2 ஆக ரூ. 50 செலுத்த வேண்டும்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், சாதி ச்சான்று நகலை கொடுத்தால் பதிவுக்கட்ட ணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதுமா னது” என்றார்.

No comments:

Post a Comment