Wednesday, 16 May 2018

பேராவூரயை அடுத்த ஆவணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம்!



பேராவூரணி: காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும். தேங்காய் கொப்பரையில் சல்பர் என்ற கொடிய அபாயகரமான வேதிப்பொருளை கலப்பதை தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சார்பில் மண்வெட்டி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தொ.ச ஒன்றியச்செயலாளர் வி.ராசமாணிக்கம், ஒன்றியத் தலைவர் வி.எஸ்.கோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் பா.பாலசுந்தரம், நிர்வாகிகள் டி.ரவி, டி.பழனியப்பன், ஆர்.கோவிந்தராசு, பி.ஏ.கருப்பையா, கே.எஸ்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் டி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துவைத்து பேசினார்.  பாரதி வை.நடராஜன், வி.கோபால், எம்.சித்திரவேலு, ஏ.மரியசெல்வம், ஆர்.விஜயலட்சுமி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், " காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் தொடங்க வேண்டும். செங்கமங்கலம் மேலத்தெரு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தேங்காய் கொப்பரையில் கொடிய சல்பர் வேதிப்பொருள் சேர்ப்பதை தடை செய்யவேண்டும். கிராமப்புற இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்" என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment