Thursday, 3 May 2018

பேராவூரணியில் ரோட்டரி சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவில் தெப்ப உற்சவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. நீலகண்டபிள்ளையார் ஆலய சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றம் கடந்த ஏப். 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. திருக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் திருக்குளத்தை வலம் வந்தார்.  பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜூ, முடப்புளிக்காடு கிராமத்தினர், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள் செய்திருந்தனர்.இந்த திருவிழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் மெயின்ரோட்டில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் நீர்மோர், பாணாக்கம், குளிர்பானம், குடிதண்ணீர் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் கே.பி.எல்.ரமேஷ், செயலாளர் ஏ.சுப்பிரமணியன், பொருளாளர் டி.முருகானந்தம், நிர்வாகிகள் எஸ்.நாகராஜன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment