சுட்டு எரிக்கும் கோடையில் தென்னை மரங்கள் பாதிக்கப்படலாம். இதை எப்படி தவிர்ப்பது?ரோட்டவேட்டர் கருவியை பயன்படுத்தி, புல், பூண்டுகளை உழுதுவிடவும், ஆனால் ஆழமாக உழக்கூடாது.தென்னையின் வேர்கள் அறுபடக்கூடாது. தென்னை மர வேர்கள் தண்ணீர், உரம் தேடி 300 அடி நீளம் வரை செல்வதாக தமிழக வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அதனால் ஒரு விரல் அளவுள்ள வேர்கள் அறுபடாமல் மேலாக கீறி விடவும்.ஆழம் உழக்கூடிய சட்டிகலப்பை, கல்டிவேட்டர்களை தென்னந்தோப்புகளில் பயன்படுத்தினால் வேர் அடுக்கு குலைந்துவிடும்.தென்னை மரங்களிலிருந்து 5 அடி தள்ளி உழவும்.தென்னை மர பக்கத்தில் உள்ள புற்களைக் கையால் எடுத்துவிடவும்.மரத்தில் காயம் ஏற்படக்கூடாது. மரத்தில் காயம் ஏற்பட்டால் அந்த காயம் வழியாக சிவப்புக் கூன்வண்டு புகுந்து அதன் இனத்தைப் பெருக்கி மரத்தைத் தின்று கொன்றுவிடும்.வரப்புகள் அமைத்து நீர்பாய்ச்சியும், சொட்டு நீர் குழாய்களை சரிசெய்து அடைப்பு நீக்கியும் பாதுகாக்கவும்.மூன்று நான்கு வயதுடைய தென்னை மரங்கள் வளரும் தோப்புகளில் மட்டைகள் சாய்வாக தொங்கி நிற்கும். உழவு ஓட்டும்போது அதை வெட்டக்கூடாது.தென்னை மரங்களிலிருந்து மூன்றடி தள்ளி வேர்கள் அறுபடாமல் அரைவட்டம் எடுத்து தென்னைக்கு என்று தயாரிக்கப்படும் “கல்ப விருட்சா’ மிக்சரை ஒரு கிலோ அளவில் கொடுக்கவும்.மஞ்சள் கலர் இருந்தால் ஒரு கிலோ யூரியாவும் கொடுக்கவும். அதன்மேல் 30 கிலோ அளவு தொழு உரம் போட்டு தண்ணீர் கட்டவும். கழிவு மட்டைகளையும் பரப்பிவிடவும். ஈரம் அதிக நாட்கள் இருக்கும்.தென்னை மரங்களில் பூக்கள் கருகி பிஞ்சுகள் உதிர்வது சத்துகள் பற்றாக்குறையினால் ஒரு புறம் இருந்தாலும் பூஞ்சாண எதிர்ப்புசக்தி குறைபாடும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.உதிர்ந்து கிடக்கும் பிஞ்சுகளின் நெட்டிப்பகுதிகளை எடுத்துப் பார்த்தால் சாம்பல் நிறத்தில் படர்ந்து பூஞ்சாணம் வளர்ந்திருப்பது தெரியும். அது “கொச்சலியோ போல்லியோ’ வகை பூஞ்சாணம்.அதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க “கோகோஸ்’ உரமருந்தை மட்டை இடுக்குகளில் பயன்படுத்தவும். “கோகோஸ்’ தாவர வகை பவுடர். அதில் உள்ள மருத்துவ குணத்தால் பூஞ்சாண வியாதி எதிர்ப்பு சக்தி உண்டாகிறது. அதில் உள்ள இயற்கையான சத்துக்கள் இலைவழி உணவாகி பாளைகள் 5 பங்கு பெரிதாகவும் மூன்று பங்கு அதிக நீளமாகவும் வருகிறது.திருவையாறில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கடும் கோடை வரும் முன் பயிர் பாதுகாப்பு முறைகளை முறைப்படுத்தி செய்தால் தென்னை மகசூல் பெருகும்.
..... இதோ, இன்னும் சில டிப்ஸ்கள் ....
பருவமழை துவங்கும்போதும், முடியும் போதும் நடுவில் மழைக்காலத்திலும் தோப்பை நன்கு உழ வேண்டும். கோடைமழை பெய்வதால் இடைஉழவு செய்யலாம். இடைஉழவு செய்வதால் மழை நீர் தோப்பிலேயே ஈர்க்கப்படும். வேர்களுக்கு காற்றோட்டம் கிடைத்து நன்கு வளர்ந்து பயிரூட்டங்களையும் தண்ணீரையும் நன்கு எடுத்துக்கொள்ளும். களைகள் நீக்கப்படுகின்றன. தேங்காய் மகசூல் கூடும். தோப்பில் பாளை,கூராஞ்சி,அடிமட்டை,பன்னாடை,ஓலை மற்றும் குப்பை கூளங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும். ஓலைகளைச் சேகரித்து கீற்று பின்னலாம். கரையான் புற்றுக்கள் இருந்தால் அவற்றை முழுவதுமாக வெட்டி எடுத்துவிட வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள் தாக்கப்பட்டு இறந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். காண்டாமிருக வண்டின் புழுக்கள் குப்பைக்குழியில் வளரும் தென்னந்தோப்பில் குப்பைக்குழிகள் இருந்தால் அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அடிமரங்களில் அரிவாள் கொண்டு கொத்தி காயம் ஏற்படுத்தக்கூடாது. கோடைக்காலத்தில் குரும்பைகள் அதிக அளவில் கொட்டினால் பிளானோபிக்ஸ் என்னும் பயிர் ஊக்கியை 8மி.லிக்கு 18லிட்டர் தண்ணீர் கலந்து பாளை வெளிவந்த 30வது நாளில் பாளையின் மீது கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். ஒரு பாளைக்கு அரை லிட்டர் போதும், மீண்டும் 15 நாட்கள் கழித்து ஒருமுறை இதைத் தெளிக்க வேண்டும். இதனால் குரும்பைகள் அதிகம் உதிராமல் காய்களாக மாறும். ஒவ்வொரு தென்னை மரத்தைச் சுற்றியும் 2மீட்டர் சுற்றளவில் 30செ.மீ ஆழத்திற்கு உரிமட்டைகளை நார்ப்பகுதி மேலே இருக்கும்படி மண்ணில் புதைக்க வேண்டும். இதனால் பாய்ச்சப்படும் நீரும், மழை நீரும் சேமிக்கப்பட்டு சிறிது சிறிதாக மரத்திற்கு கிடைக்கும்.

No comments:
Post a Comment