தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் இன்று ( 07.05.2018 ) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன் மற்றும் பல்வேறு டீகாரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். சாலை விபத்தில் காயம் அடைந்த 3 நபர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்து நிவாரண நிதியாக ரூ. 1 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கான காசோலைகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கல்வி உதவித் தொகையாக 63 பள்ளி குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்துக்கு பள்ளி குழந்தைகளின் வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான ஆணையினையும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ரவிச்சந்திரன்,மாவட்ட குர்ந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என். நடராசன், குழந்தைகள் நல குழுத் தலைவர் திலகவதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment