பேராவூரணி கடைத்தெருவில் சாலை ஓரத்தில், ஒவ்வொரு கடைகளுக்கும் எதிரில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் கழிவறை கழிவுகளை ஊற்றிவிடும் நிலைத் தொடர்கிறது. பலமுறை அலுவலகத்தில் தெரிவித்தும் இச்செயலை பேரூர் நிர்வாகம் நிறுத்துவதாக தெரியவில்லை.
நீலகண்ட பிள்ளையார் கோயில் எதிரில் உள்ள வடிகால் வாய்க்கால் பகுதியில், மருந்தகம், குழந்தைகள் ஆடையகம், தேனீர் நிலையம், பல்கலைக்கழக கல்வி நிலையம் உள்ள பகுதியில் இப்படி கழிவறை கழிவுகளை ஊற்றிவிடுவது தொடர்கதையாகி வருகிறது.
ஒருபக்கம் காய்ச்சல் நோய் பரவும் நிலை குறித்து விழிப்புணர்வு செய்துவரும் பேரூராட்சி பணியாளர்கள் முதலில் விழிப்புணர்வு செய்யவேண்டியது பேரூராட்சி நிர்வாகத்திற்குதான்.
பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கழிவறை கழிவுகளை வடிகால் வாய்க்காலில் ஊற்றுவதை தடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment