Saturday, 9 June 2018

மல்லிப்பட்டினத்தில் உலக பெருங்கடல் தின விழா

பேராவூரணி.: ஜூன் 8-  மல்லிப்பட்டினத்தில் உலக பெருங்கடல் தினம் வெள்ளியன்று கொண்டாடப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்வாக சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளம் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘கடல் வாழ் உயிரினங்கள் என்ற தலைப்பில்’ ஓவியப் போட்டியும், ‘கடலின்பொருளதார பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் கட்டுரைபோட்டியும் நடந்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.இவ்விழாவில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முனைவர் செந்தில்குமார் பங்கேற்றார். கடலோர பாதுகாப்புக்குழு காவல் ஆய்வாளர் சுபாஸ் சந்திரபோஸ், தமிழ்நாடு மாநிலவிசைப்படகு நலச்சங்க பொதுச்செயலாளர் தாஜூதீன், நாட்டுப்படகு மீனவர் சங்க பொறுப்பாளர் வீரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் பலரும் கலந்து கொண்டு மீன்பிடி இறங்கு தளத்தை சுத்தம் செய்தனர்.

No comments:

Post a Comment