Saturday, 9 June 2018

தஞ்சாவூர் மாவட்டத்தில் விசைப்படகுகள் இன்று ஆய்வு

பேராவூரணி:-  தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 முதல் அமலில் உள்ளது. ஜூன் 15 ஆம் தேதியுடன்60 நாள் நிறைவடைந்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க ஏதுவாக மீனவர்களின் விசைப்படகுகள் மீன்வளத் துறை அதிகாரிகள் சரிபார்க்கப்பட்டு அனுமதி வழங்கப் படும்.இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தஞ்சை மாவட்ட விசைப்படகுகள் வேறு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது விசைப்படகின் பதிவெண், படகுகள் சீரமைக்கப்பட்டு இருக்கிறதா, உயிர்காக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும். மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு சரிபார்த்த பின்னர் மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப்படும். இதன் பின்னரே மானிய விலை டீசல் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment