Friday, 22 June 2018

பேரூராட்சிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரூராட்சிகளில் சுகாதாரப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தினார். ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி திறனாய்வு கூட்டத்தில் அவர் பேசியது: பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வரி மற்றும் வரியற்ற இனங்கள் வசூல் பணிகள் ஆகியவை திறம்பட மேற்கொள்ளப்பட வேண்டும். பேரூராட்சிப் பகுதிகளில் சாலை பணிகள் மேற்கொள்ளவும், பேரூராட்சிகளில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மழை நீர் வடிகால், வாய்கால்களைச் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. பேரூராட்சிப் பகுதிகளில் முழுவதும் சுகாதாரப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment