Saturday, 30 June 2018

தஞ்சாவூரில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டும் தொடர்ந்து விபத்துகளின் சதவீதம்அதிகமாகியுள்ளது. இதை குறைப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் சாலை ஓரங்களில் நிற்கும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்குவாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். தொடர்ந்து வாகனங்களை நிறுத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கு சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் பகுதிகளில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு கூட்டம் நடத்தி தங்கள் பகுதியில் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment