தஞ்சாவூர்: குறுவை தொகுப்புத் திட்டம் - 2018 முதலமைச்சரால் ஜூன் 8 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தபடி, குறுவை விவசாயிகளின் நலனை பாதுகாத்திட குறுவை தொகுப்புத் திட்டம் 2018 இன் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.2099.488 லட்சம் நிதி வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கியது போல் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடந்து வழங்கப்படும். குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை குவிண்டாலுக்கு ரூ.1750 மானியம் வீதம் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கிடவும், வேளாண் இயந்திரங்களை கொண்டு நெல் நடவு வயலை குறித்த காலத்தில் திறம்பட தயார் செய்வதற்காக பவர் டில்லர் மற்றும் ரோட்டவேட்டர்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கிடவும், மின் இணைப்பு கிடைக்கப் பெறாத விவசாயிகளுக்கு உதவும் வகையில், 600 டீசல் இன்ஜின்கள் மானிய விலையில் வழங்கிடவும் நடவு இயந்திரங்களை கொண்டு நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.4000 வீதம் 35,000 ஏக்கருக்கு ரூ.1400 லட்சமும் பின்னேற்பு மானியமாக வழங்கிடவும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 50 சதவீதம் மானியத்தில் நுண்ணூட்டக்கலவை வழங்கிடவும், துத்தநாக குறைபாடு உள்ள இடங்களில் சிங்க் சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு ஏக்கருக்கு ரூ.200 வீதம் பின்னேற்பு மானியம் ரூ.56 லட்சமும் மண்ணின் தன்மையினைக் காக்க ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு ரூ.600 பின்னேற்பு மானியமாக வழங்கிட ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த நாட்களில், குறைந்த நீரில் அதிகம் லாபம் தரக்கூடிய பயறு வகைப் பயிர்களை 5500 ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு 60 சதவீத மானியத்தில் பயறு வகை விதைகளை வழங்கிடவும், 50 சதவீத மானியத்தில் திரவ உயிர் உரங்கள் வழங்கிடவும் பயறு நுண்ணூட்டக் கலவைக்கும், இலைவழி டி.ஏ.பி உரம் தெளிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sunday, 24 June 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment